Nature India
1.இயற்கை விவசாயம்
இயற்கை விவசாயம் மற்றும் பலன்கள்
2 மண் வளம் மேம்பாடு
1.பல தானிய பயிர் விதை தொகுப்பு
(5 வகை , 20 உப வகைகள்/ 20கிலோ )
விதைப்பிற்கு பின் 6-7 வாரம் கழித்து மடக்கி விட்டு உழுது 10 நாள்கள் மக்க செய்து பயிர் செய்யவும்.
ரசாயண உர பாதிப்பு நிலத்தை இயற்கை விவசாயத்திற்கு மாற்றவும் , நிலத்திற்கு தேவையான நுண்ணுட்ட சத்துக்களை இயற்கை முறையில் நிலை நிறுத்தவும் உதவும்.
-----–---------------------------
விதை அளவுகள்:
1. தானிய வகை
சோளம் – 1 கிலோ
கம்பு – 1/2 கிலோ
தினை – 1/4 கிலோ
சாமை – 1/4 கிலோ
2. பயிர் வகை :
உளுந்து – 1 கிலோ
பாசிப்பயிர் – 1 கிலோ
தட்டப்பயிர் – 1 கிலோ
கொண்டைகடலை -1கிலோ
3. எண்ணெய் வித்துக்கள்:
எள்ளு – 1/2 கிலோ
நிலக்கடலை – 2 கிலோ
சூரியகாந்தி– 2கிலோ
4. பசுந்தாள் பயிர்கள்:
நரிப்பயிர் – 1/2 கிலோ
கொள்ளு 1 கிலோ
5. நறுமணப் பயிர்கள் :
கடுகு – 1/2 கிலோ
வெந்தயம் – 1/4 கிலோ
சோம்பு – 1/4 கிலோ
கொத்துமல்லி – 1 கிலோ
----------------------------------
ஒரு ஏக்கருக்கு 20 கிலோ.
----------------------------------
மேலும் விபரம் பெற WhatsApp 9345416066
2பசுந்தாள் / மூடாக்கு + உயிர் உர விதைகள்:
விவசாய /தென்னை மரத்திற்கு ஊடு பயிர் நீர் ஆவி, பூச்சிகளை கட்டுப்படுத்தி நிலத்தில் நுண்ணுட்ட சத்துக்களை மேம்படுத்த உதவும்.
விதை அளவுகள்:
தக்கைப்பூண்டு 4 கிலோ
சணப்பை- 4 கிலோ
கொழிஞ்சி- 2 கிலோ
நரிப்பயிறு 4 கிலோ
அவுரி விதை 2 கிலோ
கொள்ளு 4 கிலோ
----------------------------------
ஒரு ஏக்கருக்கு 20 கிலோ.
----------------------------------
மேலும் விபரம் பெற WhatsApp 9345416066
3.கால்நடை தீவன பயிர் விதை தொகுப்பு :
ஆடு , மாடு, முயல் பண்ணைக்கு ஏற்றது.
1.வேலி மசால் :
அளவு :3 கிலோ/ஏக்கர்,
முதல் அறுவடை 85 நாள் பின் 45 நாள்களுக்கு ஒரு முறை .
2.முயல் மசால்:
அளவு :3 கிலோ/ஏக்கர்,
முதல் அறுவடை 75 நாள் பின் 60 நாள்களுக்கு ஒரு முறை .
3.குதிரை மசால்:
அளவு :3 கிலோ/ஏக்கர்,
முதல் அறுவடை 60 நாள் பின் 30 நாள்களுக்கு ஒரு முறை .
4.COFS 29 :
அளவு :2 கிலோ/ஏக்கர்
முதல் அறுவடை 70 நாள் பின் 50 நாள்களுக்கு ஒரு முறை .
5.சவுண்டல்:
அளவு :3 கிலோ/ஏக்கர்,
முதல் அறுவடை 120 நாள் பின் 60 நாள்களுக்கு ஒரு முறை .
8. தீவன மக்கா சோளம்:
அளவு :12 கிலோ/ஏக்கர்,
முதல் அறுவடை 65 நாள் பின் 70 நாள்களுக்கு ஒரு முறை .
9.தீவன தட்டை பயிர்:
அளவு :8 கிலோ/ஏக்கர்,
முதல் அறுவடை 50 நாள் பின் 55 நாள்களுக்கு ஒரு முறை.
விபரம் பெற 9345416066.
4. பூச்சி மேம்பாடு
காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்த ஆமணக்கு புண்ணாக்கு.
அரையடி பானையை தரையோடு தரையாக புதைத்து வைக்கவேண்டும் ஒரு வண்டு நடந்து வந்து பானைக்குள் விழவேண்டும்.
பானையில் பாதியளவு தண்ணீர் எடுத்து அதில் 3 கைப்பிடி ஆமணக்கு புண்ணாக்குடன் பப்பாளி /அரிசி வடிகட்டிய கஞ்சி/ இளநீர் கலந்துவிடவேண்டும்
10 அல்லது 15 நாட்களில் வண்டு சேரும் அதை அழித்துவிடலாம் பின்பு பானையை சாணம் போட்டு நன்கு கழுவிவிட்டு மறுபடியும் மற்றொரு இடத்தில வைக்கலாம். கழுவாமல் வைத்தால் பூச்சி இறந்த வாடை மற்ற பூச்சிகளை வர விடாது .
ஒரு ஏக்கருக்கு 6 முதல் 7 இடங்களில் வைக்கலாம் . அதேசமயம் இடங்களை மாற்றி மாற்றி வைப்பதும் நல்லது . மூன்று மாதத்திற்கு இதை தொடர்ந்து செய்யலாம்.
மேலும் விபரம் பெற Whatsapp 9345416966